அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகள் நிறுத்தி வைக்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பழமையான அரசு வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று இரு வங்கிகளும் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 12 அன்று இரவு 9 மணி தொடங்கி பின்னர் காலை 9 மணி வரை இந்த இணைப்பு பணிகள் நடைபெறும். 2020 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது சில அரசு துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இதன்படி ஏற்கனவே சில வங்கிகள் இணைக்கப்பட்டுவிட்டன.
தற்போது அலகாபாத் வங்கி இந்திய வங்கியுடன் இணைக்கப்படும்போது அலகாபாத் வங்கியின் வாடிக்கையாளர்கள் சில மாற்றங்களை சந்திக்க நேரிடும். இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. எனினும் அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு, செக் வழங்குதல், பணப்பரிவர்த்தனை, நெட் பேங்கிங்க் போன்ற சேவைகளை பயன்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும். தற்போது இந்த சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்ட பிறகு அனைத்து சேவைகளும் வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.