பெண்களை மட்டும் அதிகம் பாதிக்கும் தைராய்டு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சென்று பாருங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தைராய்டு பிரச்சனை தற்போது அதிகமாக உள்ளது. அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் உப்பின் அளவு குறைந்தால் வரும். எந்த அறிகுறிகளும் இல்லாமல் தைராய்டு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதனை நீங்கள் அறியாமல் விட்டால் பல பாதிப்புகள் ஏற்படும். இரண்டு வகையில் தைராய்டு பிரச்சினை உள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு, மற்றொன்று ஹைபோ தைராய்டு. ஹைப்பர் தைராய்டு அறிகுறிகளாக தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவற்றை இருக்கும். ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் ஆக மலம் கழிப்பதில் சிக்கல், மாதவிடாய் பிரச்சனை, உடல் சோர்வு பிரச்சனை ஆகியவை இருக்கும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உங்களுக்கு தைராய்டு உள்ளது என்று அர்த்தம். இதுகுறித்த சந்தேகம் இன்னும் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.