Categories
உலக செய்திகள்

எங்களை சீண்டாதீங்க…..! அப்படி சீண்டினால்…. போருக்கு தயாராகுங்க… பரபரப்பாக அறிவித்த பிரபல நாடு …!!

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் செர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார் .

இந்த மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத்தலைவர் ஜோசப் போர்ரெல்  ரஷ்யாவிற்கு வருகைப் புரிந்து அறிக்கை  ஒன்றை வெளியிட்டார் .இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பிரஸ்ஸல்ஸ் பரிசீலிக்கும் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் .மேலும் ரஷ்யா ஐரோப்பாவிலிருந்து விலகி கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இவரின் இந்த அறிக்கைக்கு எதிராக ரஷ்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், ரஷ்யாநாட்டின் எதிர்க்கட்சி அரசியல் வாதியான அலெக்ஸி  நவல்னி கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் பொருளாதார தடைகள் மறுபடியும் விதித்தாள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை நாங்கள் முறித்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் உலக வாழ்க்கையில் இருந்து தனியாக இருக்க நாங்கள் விரும்பவில்லை என்றும், அமைதி வேண்டும் என்றால் போருக்குத் தயாராகுங்கள் என்றும் செர்ஜி  லவ்ரோவ் கூறியுள்ளார் .இதில் ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் போரெல்லின் அறிக்கை  ஆச்சரியபடுவதாக உள்ளது என்று கூறிவிட்டு பின் அதற்க்கு  முரணாக  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது .

Categories

Tech |