Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதுவரைக்கும் ஒருத்தர் கூட எட்டி பார்த்தது இல்ல… வழிய வந்து பேசும் உறவுகள்… மெகா அதிஷ்டத்தால் திகைத்த நபர்…!!

விற்காமல் வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்து விற்பனையாளரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள இரவிய தர்மபுரம் பகுதியில் சுரபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் சுரபுதீன் வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துவிட்டது.

இதுகுறித்து சுரபுதீன் கூறும் போது, தனக்கு அப்பா இல்லாத காரணத்தினால் தனது அம்மா சிரமப்பட்டு மூன்று குழந்தைகளான எங்களை வளர்த்தனர் என்று கூறியிருக்கிறார். இதனால் வீட்டின் கஷ்டத்தை உணர்ந்து வெளிநாட்டில் 9 வருடமாக வேலை செய்தும் தனக்கு ஒரு பலனும் கிடைக்காமல் போனதால் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு இவருக்கு லாட்டரி கடை போட வேண்டும் என்ற யோசனையை வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் கேரளாவிற்கு பைக்கில் சென்று அந்த லாட்டரி சீட்டுகளை விற்று வந்ததாக கூறியுள்ளார்.

அப்போது இவர் கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். அதில் விற்பனை செய்யப்படாமல் தன்னிடம் மீதமுள்ள சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதை அறிந்த உடன் தான் சந்தோஷத்தில் அழுவதா அல்லது சிரிப்பதா எனத் தெரியாமல் திகைத்ததாக கூறியுள்ளார். இந்த பணத்தை வைத்து தாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியதற்கு காரணமான தனது அம்மாவை கடைசி காலம் வரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தன்னுடைய நோக்கம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் அப்பா இல்லாத எங்களை இதுவரை சொந்தக்காரர்கள் வந்து பார்த்ததில்லை எனவும், பரிசு பணம் கிடைத்த பிறகு அனைவரும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தன் மனைவி தன்னை பிரிந்து சென்றதால் தான் மனவருத்தத்துடன் இருப்பதாகவும், அவர் தனக்காக இல்லாவிட்டாலும் தன்னுடைய மகனை நினைத்து மீண்டும் திரும்பி வந்தால் மட்டுமே இந்த லாட்டரி பரிசு பணம் கிடைப்பதற்கான முழு சந்தோஷமும் எனக்கு கிடைக்கும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |