Categories
உலக செய்திகள்

“ஐய்யோ!” பயங்கர வெடி விபத்து… கட்டிடம் தரை மட்டம்.. பலர் காயமடைந்த சோகம்…!!

ரஷ்யாவில் சூப்பர்மார்கெட்டில் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானதுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவில் உள்ள North Ossatiya பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Gagkayeva என்ற தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக அவசர செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று வெடித்து சிதறி முற்றிலும் தரைமட்டமாகியது. இது எரிவாயு விபத்தாக இருக்கக் கூடும் என்றும் பலர் இதனால் பாதிப்படைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |