ஆப்பிள் வாட்ச் மூலம் கொரோனாவை கணிக்க முடியும் என புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து மேலும் ஆய்வுகளை உலக நாடுகள் அனைத்தும் நடத்தி வருகின்றன. கொரோனா அழிப்பதற்கான தடுப்பூசிகள், அதனை கண்டறிவதற்கான கருவிகள் என ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிக்க முடியும் என புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் ஸ்வாப் டெஸ்ட்டை ஒப்பிடும் போது ஒரு வாரத்திற்கு முன்பே கணிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களின் இதயத்துடிப்பு மாறுபாடு வடிவங்களை அறிகுறி உள்ளவர்கள் ஒப்பிட்டு கண்காணித்து உள்ளனர்.