Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா செய்தார் ராகுல்” 4 பக்க விரிவான அறிக்கை வெளியீடு …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை ஏற்க மறுத்து வருகின்றது.

இந்நிலையில் இன்று ராகுல் காந்தி ராஜினாமா செய்வது தொடர்பாக விரிவான விளக்கம் கொண்டா அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் , மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தேர்தல் தோல்விக்கு மேலும் பலரை பொறுப்பாக்க வேண்டியுள்ளது . காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதால் எதிர்கால காங்கிரஸ் கட்சிக்கு எனது ராஜினாமாவை மிக முக்கியமானதாக பார்க்கிறேன்.

வேறு தலைவரை நான் தேர்வு செய்ய முடியாது.கட்சிக்கான அடுத்த தலைவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது. கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதை நான் மிகவும் மதிக்கிறேன் . இந்தியாவின் எந்த அமைபிலும் நடுநிலைமை இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அரசின் அமைப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது. அமைப்புகளை கைப்பற்றுவது ஆர்எஸ்எஸ் திட்டம் என கூறப்படும் நிலையில் அது நிறைவேறி உள்ளது. இந்தியா பற்றிய பாஜகவின் பார்வை என்னை கோபம் அடைய செய்கிறது.

பாஜகவினர் வேற்றுமை பார்க்கும்போது நான் ஒற்றுமையை பார்க்கின்றேன் . இந்தியா என்பதற்காக அடிப்படை தத்துவத்திற்கு நேரெதிராக பாஜக தத்துவம் உள்ளது.நான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டன் , இந்திய நாட்டின் மகன்.  அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கற்பனை செய்து பார்க்க முடியாத வன்முறையை இந்தியா சந்திக்கும் என்று விரிவான அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |