Categories
சினிமா தமிழ் சினிமா

அனிருத்-கீர்த்தி சுரேஷ் இடையே காதல்?… வைரலாகும் புகைப்படம்…!!!

 நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷின் நெருக்கமான புகைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிகர் மேக்னா இயக்குனர் சுரேஷின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்தார். மேலும் தெலுங்கில் மறைந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று கதையை “மகாநடி” என்று படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அதுமட்டுமின்றி ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் அனிருத்தின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து  அவர்களின் புகைப்படத்தையும் பதிவு செய்தார். இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கூடிய சீக்கிரத்தில் திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசுத்து வருகின்றனர் .ஆனால் இதைப்பற்றி அனிருத்தும் கீர்த்தி சுரேசும் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. இதற்கு இடையில் அனிருத்தும் ஆண்ட்ரியாவும் முத்தம் கொடுக்கும் காட்சி வேகமாக வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்கள் ரசிகர்களுக்கிடையே குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |