சென்னையில் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் குறிப்பாக பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் கற்று வந்துள்ளார். ஆனால் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் தனக்கு புரியாததால் மிகுந்த குழப்பத்தில் இருந்துள்ளான்.
அதனால் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் எனக்கு புரியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவனின் தற்கொலைக்கு காரணம், தான் படிக்கவில்லை என்றால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று அச்சமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.