நள்ளிரவில் தென்பசிபிக் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்க ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது .
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தென்பசிபிக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது .
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் நியூசிலாந்து, புதிய கலிடோனியா, வாணூட்டு போன்ற கடற்கரை பகுதியில் சுனாமி ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பெரிய பூகம்பத்தினால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதலில் ரிக்டர் அளவு 7.2 ஆகவும் பிறகு 7.5 ஆகவும் அதன்பின் ரிக்டர் அளவு 7.7 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய வானிலை மையம் ஆஸ்திரேலியாவில் சிறியளவு சுனாமி ஏற்பட்டதாக கூறுகிறது இதனையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் 0.3மீட்டர் முதல் 1 மீட்டர் வரை சுனாமி பேரலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூஸிலாந்து அரசு மக்களை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் கடல் பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்குத்தீவின் வடக்குப்பகுதிக்கும் , கிழக்கு கடற்கரைப் பகுதிகளுக்கும் ,கிரேட் பேரியர் தீவுக்கும் சுனாமி ஏற்படலாம் என்று எச்சரிக்கைசெய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, நிலநடுக்கத்தின் அளவு 7.7 ஆக இருப்பதை தொடர்ந்து கடலோர பகுதிகள் கரையில் வலுவான மற்றும் அசாதாரண நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத எழுச்சிகளை காண முடியும் என்று கூறியது.