Categories
உலக செய்திகள்

உங்க ஆராய்ச்சிக்கு ஒரு அளவில்லையா…? 54 சிறிய காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

அறிவியல் சோதனை மீதுள்ள ஆர்வத்தில் 54 காந்தங்களை சிறுவன் விளங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ப்பிரிஸ்விட்ச் பகுதியில் ரிலே மோரிசன் என்ற 12 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவனுக்கு அறிவியல் குறித்த சோதனைகளில் ஈடுபடுவதில் எப்போதுமே ஆர்வம் அதிகம். இந்நிலையில் தன்னுடைய அறிவியல் சோதனைக்காக பந்து வடிவில் இருந்த சிறிய காந்தங்களை விழுங்கி வெளியில் உள்ள காந்த ஈர்ப்பு பொருட்கள் தனது உடலில் ஒட்டுமா அல்லது ஒட்டாதா என்று சோதித்து உள்ளார். மேலும் அதனை வெளியேற்றும் போது, அது எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் காந்தத்தை விழுங்கிய  காரணத்தால் மூன்று நாட்களாக ரிலே சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும் 4 நாட்களாக அவர் விழுங்கிய காந்தங்கள் வெளியே வராததால், அதிர்ச்சி அடைந்த ரிலே அவரது அம்மாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதன்பின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அந்த பரிசோதனையில் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை சிறுவன் விழுங்கிய காந்தங்கள் சேதப்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவர் விழுங்கிய 54 காந்தங்களை சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் வெளியேற்றி விட்டனர்.

Categories

Tech |