ஹைதராபாத் அருகே 5 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத் அருகே மேச்சால் காடி கேசர் என்ற பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் கல்லூரி மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் படிப்பு செலவுக்காக மெடிக்கல் ஸ்டோரில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு வேலை முடிந்த மாணவி ஆட்டோவில் சென்ற போது, வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து பலாத்காரம் செய்துள்ளனர். அண்ணா விட்டு விடுங்க, அண்ணா விட்டுவிடுங்கள் என்று மாணவி கெஞ்சிக் கூத்தாடியும் விட்டுவைக்கவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.