Categories
மாநில செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி… 3 மணி நேரம் மட்டுமே… வெளியான தகவல்…!!!

தமிழகத்திற்கு பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடி மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கோரி முதல்வர் பழனிசாமி கடந்த 19ஆம் தேதி மோடியை சந்தித்து பேசினார். அதன்பிறகு மோடி தமிழகம் வருவதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி பிப்ரவரி 11ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்கிறார், அங்கு பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். மேலும் தமிழகம் வரும் பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14ஆம் தேதி டெல்லியில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு சென்னை வரும் மோடி, 11:15 மணிக்கு நேரு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு மூன்று மணி நேர சென்னை பயணத்தை முடித்து கொண்டு மதியம் ,1.35 மணிக்கு கொச்சி செல்கிறார்.

Categories

Tech |