மது குடித்துவிட்டு சூதாட்டம் ஆடுயதற்காக 2 பேரை பொது இடத்தில் வைத்து கம்பால் அடித்து தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய சட்டத்தை விதிக்கும் முஸ்லிம் பெரும்பான்மையுடைய ஒரே மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாகாணத்தில் கடந்த திங்களன்று மது அருந்திவிட்டு 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மது அருந்தியது மட்டும் அல்லாமல் தகாத உறவில் ஈடுபட்டதல் இஸ்லாமிய மத விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மீதமுள்ள 2 பேர் கிருஸ்துவர்கள் ஆவார்.
இந்நிலையில் தேசிய மற்றும் மதச் சட்டங்களை மீறும் முஸ்லிமல்லாதவர்கள் குற்றம் புரிந்தால் எந்த ஒரு அமைப்பின் கீழ் தங்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யலாம். அதன் படி முகமூடி அணிந்த ஷரியா அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட 2 கிறித்துவர்களையும் தலா 40 முறை கம்புகள் அடைத்துள்ளனர். இந்த தண்டனையை பெற்ற குற்றவாளிகளில் ஒருவரான ஜே.எஃப் என்பவர் கூறும் போது குற்றவியல் வழக்குகளில் சிக்கினால் ஆறு மாதங்களுக்கு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதால் இந்த தண்டனையை ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனித உரிமைக் குழுக்கள் கூறும் போது பொது இடத்தில் இவ்வாறாக அடித்து தண்டனை அளிப்பதை கண்டிக்கதக்கது. மேலும் இப்படிப்பட்ட ஒரு தண்டனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று இந்தோனேஷியாவின் அதிபர் கோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.