Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பலிவாங்கிய பிரைட் ரைஸ்”… அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்…. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்..!!

திருப்பூரில் இரவில் தாமதமாக பிரைட்ரைஸ் சாப்பிட்டு தூங்கிய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளை சேர்ந்த சந்தோஷ்-ஆர்த்தி தம்பதியினருக்கு இரு மகன்களும், பிரியங்கா என்ற மகளும் இருந்துள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் 3 குழந்தைகளுடன் சந்தோஷ் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலை பார்த்து வருகிறார். ஹோட்டலில் வேலை முடிந்ததும் தினமும் இரவு 11 மணி என தாமதமாக வரும் சந்தோஷ் தான் எடுத்து வரும் பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதே வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோலத்தான் பணி முடிந்து இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்த சந்தோஷ் பிரைட்ரைஸ் மூத்த மகன் மற்றும் பிரியங்காவிற்கு கொடுத்துள்ளார். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு படுத்த நிலையில் காலையில் எழுந்த சந்தோஷ், பிரையன் அசைவின்றி இருந்ததைப் பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அப்போது சந்தோஷம் இருந்த மற்றொரு குழந்தையான பிரியங்கா மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இரண்டு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள் இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்ட பிரைட்ரைஸ் உணவால் உயிரிழந்திருக்க கூடும் என்று கூறியுள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததில் இரவு சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருந்தது தெரியவந்தது. உயிர் இறப்பிற்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக செரிக்காமல் இருந்த குழந்தைகளின் உடல் பாகங்கள் தடவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க குழந்தைகளுக்கு இரவில் ஃப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் போன்ற செரிமானமாகாத துரித உணவுகள் தருவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்துகின்றனர்.

Categories

Tech |