சென்னையில் பேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றொரு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அம்மு என்பவர் தனியா ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். திருநின்ற ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் உடன் ஃபேஸ்புக் மூலம் அம்முவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்ததால் இன்று திருமணம் நடக்க இருந்தது. வில்லிவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மணமக்கள் கார்த்திக் அம்மு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலையில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நள்ளிரவில் மணப்பெண் அம்மு மண்டபத்தில் இருந்து மாயமானார். இதனால் திருமண வீட்டில் இருந்த உறவினர்கள் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபமே சோகமயமானது. மண்டபத்தில்
பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மணப்பெண் அம்மு, ஆட்டோ ஒன்றில் வேறு ஒருவருடன் சென்றது தெரியவந்தது.
மணப்பெண் மாயமானதால் பெண்வீட்டாரோ மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம் செய்ய முடியாமல் திணறினர். மாப்பிள்ளை கார்த்திக் மனமுடைந்து போனார். தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் வேறு வழியில்லாமல் தங்களது சீர்வரிசை எடுத்துக்கொண்டு சோகத்துடன் திரும்பினர். இதற்கிடையே அம்மு நிஷாந் என்ற இளைஞருடன் கிண்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
கார்த்திக், நிஷாந்த் இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்ததாக போலீசாரிடம் அம்மு தெரிவித்ததாகவும், கார்த்திக்கை திருமணம் செய்ய அம்முவுக்கு பிடிக்காததால் நிஷாந்த் உடன் சேர்த்து வைக்க போலீசாரிடம் அம்மு வேண்டுகோள் விடுத்தார். இதேவேளையில் ஏமாற்றப்பட்ட மணமகன் கார்த்தி இளம்பெண் அன்புமிகு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை காதலித்து வரவேற்பு நிகழ்ச்சி வரை அழைத்துவந்தது ஏமாற்றிய காதலி அம்மு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனது புகாரில் கூறியுள்ளார்.