2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை கணவனும், மனைவியும் பிடித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது தொண்டு நிறுவனமான பெசோஸ் எர்த் பண்ட் என்ற அமைப்பிற்கு 10 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அடுத்ததாக, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் மெக்கென்சி ஸ்காட் என்பவர்.
இவர் வேறு யாருமில்லை, ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி ஆவார். இவர் 5.7 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். டுவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டார்சி 1.1 பில்லியன் டாலரை நன்கொடையாக அளித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார். முன்னாள் நம்பர் 1 கோடீஸ்வரரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து 157 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி 13வது இடத்தில் உள்ளனர்.