பிரபல கால்பந்து வீரரின் காதலி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் பெர்லினில் உள்ள குடியிருப்பில் 25 வயதான மாடல் காசியா லென்ஹார்ட் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்து ஒரு மகனைப் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரை பிரிந்து 32 வயதான கால்பந்து வீரர் ஜெரோம் போடெங் உடன் டேட்டிங் செய்து வருகிறார்.
ஆனால் இவர்களும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பிரிந்தனர். இவர்கள் ஒருவருக்கொருவர் செய்த துரோகம் காரணமாக பிரிந்து விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கால்பந்து வீரரை பிசாசு என்று காசியா லென்ஹார்ட் திட்டி உள்ளார். தங்கள் பிரிவால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீண்ட உடன் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.