Categories
உலக செய்திகள்

“அபாயம்”!! கடந்த 10 வருடங்களில் இல்லாத பனிப்பொழிவு… வரும் நாட்களில் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த அளவிலான தட்பவெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. குறிப்பாக ஸ்காட்லாந்தில் -16.7C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இது போன்று கடந்த 2010 ஆம் வருடத்தில் தான் இது போன்ற வெப்பநிலை பதிவாகி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் பிரிட்டனில் பனி பொழிவும் கடுமையாக ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்த பட்டிருப்பதால் மக்கள் அனைவரும் கொட்டும் பனியில் சாலைகளில் சறுக்கி விளையாடி மகிழ்ந்துவருகிறார்கள். ஸ்காட்லாந்தின் போக்குவரத்து சேவைகளில் தாமதங்கள் ஏற்படுவதும் ரத்து செய்யப்படுவது குறித்தும் போக்குவரத்து தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை அலுவலக செய்தி தொடர்பாளரான நிக்கோலஸ் என்பவர் கூறியுள்ளதாவது, இங்கிலாந்தின் கிழக்கு பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் பனிப்பொழிவு அதிகம் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து குளிர் காற்று வீசுவதால் அது சிறிது ஈரப்பதத்தை எடுத்து விடும். மேலும் இந்த பனிபொழிவானது செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் வரை தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |