நீதிமன்ற வளாகத்தில் மருமகள், மாமனாரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வாழ வந்த மருமகளை மாமனார் வரதட்சனை கேட்டு நீண்ட நாட்களாக மிரட்டியுள்ளார். சிறிது நாட்களாக சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன்பின் மருமகளை அடித்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன்படி அந்தப் பெண்ணும், மாமனார்-மாமியாரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது மாமனாரை பார்த்த அப்பெண் கடுங்கோபம் கொண்டு காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து கடுமையாக தாக்கினார். அவரை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். மேலும் இந்த வரதட்சணை வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.