Categories
அரசியல் மாநில செய்திகள்

கைக்குழந்தையுடன் பிரசாரம் செய்யும் நாதக வேட்பாளர்… மக்களை ஈர்த்த பேச்சு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கைக்குழந்தையுடன் தேர்தல் பிரசாரம் செய்வது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வினோதினி, தனது கைக்குழந்தையுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இவரது பிரசார முறையும் கனிவான பேச்சும் தொகுதி மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

Categories

Tech |