தமிழகத்தில் பயிர்க்கடனை தொடர்ந்து பொது நகை கடன் தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமன்றி அதிமுக கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களால் வழங்கப்பட்டபோது நகை கடன் தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான பொது நகை கடன்கள் விவரங்களை கேட்டு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், கூட்டுறவு வங்கிகளின் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.