மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் வளர்த்த நாய் இறந்ததால் அதற்கு சமாதி கட்டி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசக ராஜா என்பவர் மதுரை பெத்தானியாபுரம் அகஸ்திய தெருவில் வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி விஜயா. வாசக ராஜா மதுரை .மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் வீட்டில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் நாய் குட்டி ஒன்றை தன் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். நண்பன் வீட்டிலிருந்து எடுத்து வந்த அந்த நாய்க்குட்டிக்கு மணி என்று பெயரிட்டுள்ளனர். அந்த நாய்க்குட்டி அவர்கள் வீட்டில் ஐந்து வருடங்களாக இருந்து வருகிறது. அதுவும் அவர்கள் வீட்டில் ஒரு குழந்தையாக வளர்ந்து வந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மணியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் ,சிகிச்சை பலனின்றி நாய் இறந்து போனது. நாய் இறந்ததால் வாசக ராஜா மற்றும் விஜயா மிகவும் மனவேதனை அடைந்தனர். அந்த தாயின் சடலத்தை மணி உறங்கும் இடத்திலேயே புதைத்தனர். மணி நினைவாக தங்களது வீட்டுக்குள்ளேயே சமாதியை எழுப்பினர்.அந்த நாய் பயன்படுத்திய பெல்ட் மற்றும் தங்க செயினை வைத்து தினமும் வழிபாடு செய்கின்றனர். அதன் சமாதியில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.