உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் வூகான் நகரில் இருக்கும் பரிசோதனை மையத்தில் இருந்து பரவவில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் இருக்கும் வைரஸ் பரிசோதனை மையத்தில் இருந்து பரப்பியதாக எழுந்த புகாரின் பேரில் அவர்கள் சீனாவில் முகாமிட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியான பீட்டர் பென் எம்பரெக் செய்தியாளர்களிடம் கூறியபோது சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சீன அரசு ஆய்வின் போது தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அழித்ததாகவும் கொரோனா வைரஸ் வூகான் நகரில் இருக்கும் வைரஸ் பரிசோதனை மையத்தில் இருந்து பரவவில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.