ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித் குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அஜித்குமார் கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைபடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் வலிமை என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்து எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜீத் குமாரை நேரில் சந்தித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் ஒரு புதிய கதையை கூறியுள்ளார்.
அந்த படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் அஜித்குமார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம் படத்தில் அஜித் நடித்தது குறிப்பிடதக்கது. இதனையடுத்து 14 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைய இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.