Categories
உலக செய்திகள்

குடிதண்ணீரில் ஆபத்து… கணினியை ஹேக் செய்து அசம்பாவித சம்பவம்… பொதுமக்கள் அச்சம்…!

மக்கள் குடிக்கும் தண்ணீரில் மர்ம நபர்கள் ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா ஒல்டுஸ்மார் பகுதியில் சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஓல்ட் ஸ்மார்ட் பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருக்கும் தண்ணீரில் ஒரு மில்லியனுக்கு 100 பாகங்கள் அளவே சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தப்படும்.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கணினியை எவரோ ஹேக் செய்வதை கவனித்தார்.மேலும் அந்த மர்ம நபர்கள் தண்ணீரில் உள்ள சோடியம் ஹைட்ராக்சைட்டின் அளவை 11,000% ஆக அதிகரித்தனர். இதனை கவனித்த ஆப்ரேட்டர் சோடியம் ஹைட்ராக்சைடு அளவை குறைத்தார்.

மர்ம நபர்களின் செயலால் தண்ணீரில் சோடியம் ஹைட்ராக்சைடு அதிகளவு கலந்துவிட்டது. இது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறுகின்றனர். அதன்பின் இச்சம்பவம் குறித்து நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்தது. தகவலறிந்த போலீசார் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |