இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இஷாந்த் ஷர்மா அதிக விக்கெட்டுகளை வீழ்த்த ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இஷாந்த் ஷர்மா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் தொடர்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் 434 விக்கெட்டுகளை கபில்தேவும், 311 விக்கெட்டுகளை ஜாகிர்கானும் வீழ்த்தினர். இதுகுறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளதாவது, இஷாந்த் சர்மா 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் நான் விரும்புகிறேன் என்றார். மேலும் இந்திய அணியின் அறையில் மிக கடுமையாக உழைக்க கூடிய வீரர் இஷாந்த் சர்மா தான். கடந்த 2007 மற்றும் 2008 வருடங்களில் ஆஸ்திரேலியா சென்று ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தியுள்ளார். அதிக காயங்களுடன் 100 டெஸ்ட் போட்டிகளில் 98ல் விளையாடி இச்சாதனையை அடைவது மிகப் பெரிய விஷயம். 400 விக்கெட்டுகளை வீழ்த்த என்னால் முடியும்.
ஆனால் இஷாந்த் ஷர்மா 400 மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்துவதை பார்க்க நான் ஆசைப்படுகிறேன். இது அனைத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணம். அவருடைய சிரிப்பு தான் அவரின் பெரிய பலமே. சோர்வாக இருக்கும் நேரங்களிலும் சிரித்துக் கொண்டுதான் இருப்பார். நகைச்சுவை குணம் அதிகமாக கொண்ட நபர் இஷாந்த் ஷர்மா என்று கூறியுள்ளார்.