பள்ளிகள் திறந்த உடனே இரண்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிஸ் ஈபொன்னே என்ற நகரில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு புதிதாக மாற்றம் பெற்ற தென்னாப்பிரிக்கா வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பள்ளியை தற்காலிகமாக மூட கோரி உள்ளூர் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொற்று ஏற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.