Categories
மாநில செய்திகள்

“சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் தான் வேண்டும்”… தமிழ்மொழி வேண்டாம்… கேந்திரா வித்யா பள்ளி அறிவிப்பு..!!

கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்று ஆர்டிஓ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கேந்திரா வித்யாலயா பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி கட்டாயமாக்குவது குறித்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில் தமிழ்மொழி கட்டாயமாக்குவது குறித்து ஆர்டிஓ எனப்படும் தகவல் அறியும் சட்டம் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கேந்திர வித்யாலயா பள்ளி அளித்த பதிலில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை. ஹிந்தி ,சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயம் என்று பதிலளித்துள்ளது,

மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும். 6ம் வகுப்பில் சமஸ்கிருதம் படித்து பாஸ் ஆனால் மட்டுமே ஏழாம் வகுப்பில் நுழைய முடியும் என அறிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சமஸ்கிருத மொழியை தவிர்த்து தமிழ் மொழியை  படிக்க முடியாது. தமிழத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்ற நிறுவனம் பதிலளித்துள்ளது.

Categories

Tech |