ரஷ்யா அரசாங்கம் நியாயமற்ற செயலுக்கு துணை போன தூதர்களை வெளியேற்ற வேண்டும் என்று அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் சில இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்தது. இதனை கண்காணித்த ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுவதாக கடந்த வாரம் முடிவெடுத்தது.
ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் சட்ட விரோத போராட்டங்களை மறுத்தபோது இந்த மூன்று நாடுகளின் தூதர்கள் பங்கேற்றுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த ரஷ்ய அரசாங்கம் தங்கள் தூதர்கள் அவர்களது கடமை தான் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் வெளியேற்றப் படுவதற்கான காரணம் நியாயமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், தூதர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்காக அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதனால் ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளில் மோதல் ஏற்பட்டுள்ளது.