டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் மர்ம கும்பலிடம் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களை ஏமாற்றி பல கும்பல் பணம் மோசடி செய்து வருகிறது. வேலை வாங்கி தருவதாக கூறியும், பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று கூறியும் மோசடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா ஆன்லைன் மோசடியால் ரூ.34,000 பணத்தை இறந்துள்ளார். அவர் தனது பழைய சோபா ஒன்றை olx-இல் விற்பனை செய்ய முயற்சித்த போது, “QR code” லிங்கை அனுப்பி ஸ்கேன் செய்யுங்கள் பணம் தருகிறேன் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
இதை நம்பி அவர் ஸ்கேன் செய்ய, அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பலமுறை எச்சரிக்கை செய்தி போட்டு இப்படி தினமும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. அதனால் மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.