மனைவி பிரிய நினைத்ததால் கொடூரமாக எரித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றியவர் ஜோனாதன் டேவல். இவருடைய மனைவி அலேக்சியா. ஒருநாள் ஜாகிங் சென்ற தன் மனைவியை காணவில்லை என்று ஜோனாதன் டேவல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய போலீசார் 2 நாட்களுக்குப் பின் மரங்கள் அடர்ந்த பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த அலேக்சியாவின் உடலை கண்டுபிடித்துள்ளனர். தனது மனைவி இறந்ததை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுத ஜோனாதன் டேவலை கண்ட பொதுமக்கள் அனைவரும் கலங்கியுள்ளனர்.
அதனுடன் போலீஸ் தனது ஆய்வை நிறுத்தவில்லை. ஜோனாதன் டேவல் கைகளில் இருந்த காயங்களை கவணித்துள்ளனர். இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டது என ஜோனாதன் டேவலிடம் கேட்டபோது அவர் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டபோது இது உருவானது என்று போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் அலேக்சியா காணாமல் போன அன்று ஜோனாதன் எங்காவது சென்றாரா என்று விசாரித்தபோது நான் எங்கும் செல்லவில்லை என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்பு போலீசார் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது கார் எங்கேயோ புறப்பட்டுப் போனதை கண்டதாக கூறியுள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அலேக்சியா எரிக்கப்பட்டு கிடந்த இடத்தில் இருந்த கார் சக்கரங்களின் தடயங்களும் ஜோனாதன் கார் சக்கரங்களின் தடங்களும் ஒத்துபோவதை போலீசார் கண்டுள்ளனர். மேலும் அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி போது ஜோனாதனிடமிருந்து கடைசியாக உண்மை வெளிவந்துள்ளது. ஜோனாதன் அலேக்சியா இருவரும் சிறுவயதிலேயே திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் இல்லற வாழ்க்கையில் திருப்தி அடையாத அலேக்சியா ஜோனாதனை விவாகரத்து செய்யப் போவதாக கூறியுள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு விவாதம் முற்றியுள்ளது. இறுதியில் ஜோனாதன் அலேக்சியாவின் தலையை சுவற்றில் முட்டி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன்பின்பு அவரது உடலை காரில் எடுத்துச் சென்று மரங்கள் அடர்ந்த பகுதியில் எரித்துள்ளார். இதனைஅடுத்து உண்மையை கூறிய ஜோனாதனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.