ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் நாள் கொண்டாடப்படும் உலக பருப்பு தினத்தின் கருப்பொருளாக “நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் நாள் உலக பருப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதன் அன்றாடம் சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனாலும் பருப்பு வகைகளை அனைவரும் சாப்பிடுவதில்லை. ஏனெனில் பருப்பு வகைகளை சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து இன்றளவும் பலபேருக்கு தெரியவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை 2018 ஆம் ஆண்டு பருப்பு வகைகளின் நன்மைகள், அதன் மதிப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் நாளை பருப்பு தினமாக அனுசரிக்க உணவு மற்றும் விவசாய அமைப்புடன் சேர்ந்து ஐ.நா சபை முடிவு செய்தது. இந்நிலையில் உலக பருப்பு நாள் 2021 ஆண்டின் கருப்பொருளாக “நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” என்பதை பரிந்துரைத்தனர்.
இந்த கருப்பொருளானது 2016 இல் இருந்து இப்போது வரை மாறாமல் அப்படியே இருக்கின்றது. மேலும் இந்த தினத்தில் மக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அறிவுரை கூறப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறத்தில் பருப்பு வகைகளின் ஆரோக்கியத் தன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், சமையலறையில் பல்வேறு வகையான பருப்புகளை வாங்கி நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து தினசரியோ அல்லது ஒரு வாரத்திற்கு இரண்டு முறையாவது ஒரு கின்ன அளவு பருப்பை சாப்பிட வேண்டும் என தீர்மானிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு வகை பரப்பினால் பலவிதமான உணவுகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் புரதச்சத்தை அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.