குக் வித் கோமாளி பிரபலம் புகழ் நடிகர் விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த பலருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம் . அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ர லட்சுமி நடிகர் கவின் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது .
இதேபோல் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமடைந்த புகழுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது . ஏற்கனவே புகழ் நடிகர் சந்தானம் நடித்து வரும் ஒரு படத்திலும் , நடிகர் அருண் விஜய்யின் 33வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் நடிகர் விஜயின் ‘தளபதி 65’ படத்திலும் புகழ் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . சின்னத்திரையில் கலக்கி வந்த புகழ் விரைவில் பெரிய திரையிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது .