உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.