வாட்ஸ் அப்பில் உள்ள உங்கள் உரையாடலை எப்படி டெலிகிராம்-க்கு மாற்றுவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கடந்த மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. தனிநபர் குறித்த தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அப்போது எழுந்த பிரச்சனையால் பலர் டெலிகிராமுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப்பில் உள்ள உங்கள் உரையாடலை எப்படி டெலிகிராம்-க்கு மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம். Open chat in WhatsApp-3 dots on corner-> more->export chat -> telegram செய்யவும். இதனைப் போலவே குரூப் சேட் மாற்றிக் கொள்ளலாம்.