சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளவர்கள் என்றும், காவல்துறையினர் நடுநிலையாக நடந்து கொள்ளாவிட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள் நீதிமன்ற அவமதிப்பு உள்ளாவார்கள் எனத் தெரிவித்தார். காவல்துறை எப்பொழுதும் நடுநிலையாக செயல்படவேண்டும். அவருக்கு சாதகமாக செயல்பட கூடாது. அவ்வாறு செயல்பட்டால் அதற்கான பலனை அனுபவிப்பதற்கான காலகட்டம் நெருங்கிவிட்டது என்று கூறினார். தமிழகம் வந்தாலும் சசிகலாவின் முதல் பணி என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு அவர்களே அதை சொல்லுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை கைப்பற்றுவதற்கு இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கும் வேலை தொடருமா என்ற கேள்விக்கு நிச்சயம் அதற்கான வேலை தொடரும் என்று கூறியுள்ளார். அமைச்சர்கள் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிப்பது எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் பயத்தில் அவர்கள் அமைச்சர்கள் என்பதையே மறந்து வருவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.