Categories
உலக செய்திகள்

பனியால் உறைந்த பிரிட்டன்… மஞ்சள் நிற எச்சரிக்கை… மக்கள் அவதி…!

பிரிட்டனில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிரிட்டனின் கிழக்குப் பகுதியில் வலுவான பனிக்காற்று வீசுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகள் உறைபனியில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் பனிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகையால், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை வரை பயணங்களுக்கும், மின்வெட்டுகளுக்கும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப் பொழிவின் காரணமாக கோவிட் தடுப்பு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேற்று மாலை கென்ட்டின் மான்ஸ்டனில் சுமார் 14 சென்டிமீட்டர் பனிப்பொழிவு பதிவாகியிருந்தது. இந்நிலையில்,இன்று 15 சென்டிமீட்டர் வரை பனி பொழியும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |