Categories
உலக செய்திகள்

வெள்ளை நிறமாக இருக்கும் பனி ஆரஞ்சு நிறமாக மாறி ஆச்சரியம்… சுவிஸ்சில் வியக்க வைக்கும் காட்சி…!

சுவிட்சர்லாந்தில் பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள வெல் ஃபெரெட் என்ற இடத் பனிச்சறுக்கு ரீசார்ட் உள்ளது. அங்கு பனிச் சரிவில் இருந்த பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. வானமும் மஞ்சள் நிறத்தில் மாறி அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது, ஆப்பிரிக்காவில் வீசும் காற்றால் தான் பனி நிறம் மாறியதற்கு காரணம்.

ஏனென்றால் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருக்கும் மணலை காற்று அள்ளிக் கொண்டு ஐரோப்பா வழியாக வருவதால் தற்போது  சுவிட்சர்லாந்தில் பனி ஆரஞ்சு நிறமாக மாறி உள்ளது. மேலும் இந்த நிறமாற்றம் இத்தாலி மற்றும் பிரான்சிலும் நிகழ்ந்துள்ளது. வானமும், பனியும் நிறம் மாறியதைக் கண்டு சிலர் பயப்படாமல் பனிச்சறுக்கு சென்றுள்ளனர்.

Categories

Tech |