இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் வீசிய முதல் பந்திலேயே தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்டத்தை தடுமாற்றத்துடன் தொடங்கியது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 241 எடுத்து முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 85 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் வீசிய முதல் பந்திலேயே தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.