Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவிக்கு ஜோடி இவரா…? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கிய லூசிபர் படமானது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படமானது மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த படமானது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதால், மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருக்கும் நிலையில், நடிகையை தேர்வு செய்து வருகின்றனர். இது ரீமேக் படமாக இருந்தாலும் அதில் சில மாற்றங்களை செய்து சிரஞ்சீவிக்கு காதல் காட்சிகளை இணைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் சிரஞ்சீவியும், திரிஷாவும் கடைசியாக 2006ஆம் ஆண்டு வெளியான ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இதனையடுத்து சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் சிரஞ்சீவியும் திரிஷாவும் இணைய உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Categories

Tech |