Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரி இல்ல… ஒழுங்காவே வேலை பார்க்கல… பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்…!!

தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட் செல்லும் சாலையில் பெரும்பாலான பகுதிளில் அலங்கார தரைக் கற்கள் பதிக்கப்பட்டு, ரயில்வே சாலை மட்டும் சீரமைக்க படாமல் இருந்துள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சி பொது நிதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சிமெண்ட் தளம் போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் கிடந்த கழிவு மண்ணை அகற்றாமலும், தரமற்ற முறையிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மீண்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணைத் தலைவர் மிக்கேல், செயலாளர் மைக்கேல், நாடார் மகாஜன சங்கத் தலைவர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு பழைய கழிவு மண்ணை அகற்றி தரமான முறையில் சாலை அமைக்குமாறு வலியுறுத்தினர். அதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் அந்தப் பணியினை மேற்கொள்ள வேண்டும் என கூறி அவர்கள் நடந்து கொண்டிருந்த பணியை தடுத்து நிறுத்திவிட்டனர். மேலும் சாலைப்பணியானது பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |