நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகி , வரும் திரைப்படம் ‘கோப்ரா’ . அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது . இந்த படத்தில் கே ஜி எஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், பூவையார் ,மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்தராஜ் , இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் கோப்ரா படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது . இந்நிலையில் கோப்ரா படத்தில் நடிகை ஸ்ரீநிதி செட்டி நடிக்கும் காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டனர் படக்குழு . இதுகுறித்து நடிகை ஸ்ரீநிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘எனது முதல் தமிழ் திரைப்படம் நல்லபடியாக நிறைவடைந்து விட்டது’ என்று பதிவிட்டு படக் குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.