புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற அரசுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற அரசுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளோம். அதன்பின் மேற்கொண்டு என்ன செய்வது என்று முடிவு எடுக்கப்படும். அதுவரை இங்கு தான் இருப்போம். பயிர் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.