பிரிட்டனில் மோசமான வாகன விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு போலீசார் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் வில்ட்ஷயரில் இருக்கும் வெஸ்ட்பெரி நகரில் கடந்த வெள்ளி இரவு 11 40 மணிக்கு திடீரென ஒரு கார் தோட்ட சுவர் ஒன்றின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பெண்ணின் தாயார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய மகள் மோசமான விபத்தில் இறந்துவிட்டால் என்று சோகமாக பதிவிட்டுள்ளார். இதற்கு காவல்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காவல் அதிகாரி கூறியதாவது, உயிரிழந்த பெத்தானி ஓவெண்டென் கம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது உண்மையான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது தங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம். மேலும் இது ஒரு கடினமான, துன்பகரமான நேரம் என்று எங்களுக்கு தெரியும். தாங்கள் பாதுகாப்பாக சமூக இடைவெளி இருக்க நினைவில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.