Categories
உலக செய்திகள்

சாதுர்யமாக செயல்பட்ட நாய்… எஜமானரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்…. குவியும் பாராட்டுகள்…!!

வலிப்பால் துடித்த தனது எஜமானரை சாதுரியமாக காப்பாற்றிய வளர்ப்பு நாயை அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் பிரைன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் காப்பகத்தில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நாயின் முதல் உரிமையாளர் வேறு மாகாணத்திற்கு இடம்பெயர்ந்த போது சேடி என்று அழைக்கப்பட்ட இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து தன் உரிமையாளரை பிரிந்து தவித்து வந்த இந்த நாயை பிரைன் தத்தெடுத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரைனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது. அவரது சத்தம் கேட்டு சேடி அங்கு ஓடி போய் பார்த்தபோது பிரைன் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டது.

அதன் பின்னர் பிரைன் மயங்காமல் இருப்பதற்காக தனது நாக்கால் அவரின் முகத்தை நக்கியுள்ளது. இதனை தொடர்ந்து சேடி பிரைனின் சட்டையை கவ்விக்கொண்டு செல்போன் இருக்கும் இடத்திற்கு அவரை இழுத்துச் சென்றுள்ளது. அதன்பின் பிரைன் அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு அழைத்ததால் ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பிரைன் நலமாக இருக்கிறார். இந்நிலையில் விலங்குகள் மீட்பு குழு ஒன்று தனது பேஸ்புக் பக்கத்தில் சேடியின் புகைப்படத்துடன் அந்த விலங்கு தனது எஜமானரை காப்பாற்றிய சம்பவம் குறித்து பதிவிட்டிருந்தனர். இதனை பார்த்த அனைவரும் சேடியை பாராட்டி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |