Categories
மாநில செய்திகள்

“தலைக்கேறிய போதை” 2 வயது மகனை கொன்ற தாய்…. மாமனாருடன் நடந்த வாக்குவாதத்தின் கொடூரம்….!!

மதுபோதையில் தாய் தனது 2 வயது ஆண் குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாவட்டத்திலுள்ள ரமணகுடா பகுதியில் பரமேஸ்வரி என்ற பெண் கணவருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் இசை துறையைச் சார்ந்தவர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பரமேஸ்வரி குடிபோதைக்கு அடிமையானவர். சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி கடுமையான மது போதையில் இருந்துள்ளார்.

அப்போது அவர் மாமனாரிடம் புகைப்பழக்கத்தை விடுமாறு கூறியுள்ளார். அதற்கு பரமேஸ்வரியின் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு மாமனார் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த வாக்குவாதத்தில் குடிபோதை தலைக்கு ஏறி இருந்த பரமேஸ்வரி தனது 2 வயது ஆண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

Categories

Tech |