Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணம் வசூலிப்பதில் தகராறு…! மோதிக்கொண்ட திருநங்கைகள்… பரபரப்பான சேலம் கலெக்டர் ஆபிஸ் …!!

சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திருநங்கைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க திருநங்கைகள் இருதரப்பினராக  வந்தனர். அப்போழுது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த மோதலில் காயமடைந்த திருநங்கைகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் பணம் வசூலித்து தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது  இருப்பது  தெரிய வந்தது. அப்போழுது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் தெரியவந்தது. திருநங்கைகளின் மோதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |