Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முடக்கப்பட்ட நெடுஞசாலைகள்… சாலையில் அமர்ந்து கோஷமிட்ட விவசாயிகள்…!!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லூதியானா பஃரோஸ்பூர் நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சக்கா ஜாம் என்ற பெயரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியை தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுமார் 3 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் சாலை மறியல் நடைபெறாது என விவசாயிகள் அறிவித்துள்ள போதிலும் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஏராளமான காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா பஃரோஸ்பூர் நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே விவசாயிகள் போராட்டம் காரணமாக சிங், ஹாஸிபாத், திகிரி அதனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை இணைய சேவை துண்டிப்பு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |