ஆன்லைன் மோசடியில் 1 1/4 லட்சம் ரூபாயை டாக்டர் பறி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டீபனா ஜோனாத்தன் என்றார் டாக்டர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மோசடியில் ரூபாய் 1 1/4 லட்சத்தை இழந்துவிட்டார். இது குறித்து இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனியார்ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெயரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் 11 லட்சம் ரூபாய் பம்பர் பரிசாக விழுந்து உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பம்பர் பரிசு பெற வேண்டுமானால் ஜி.எஸ்.டி உள்ளிட்டவைகளை சேர்த்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 300 ரூபாய் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தை உண்மை என நம்பிய டாக்டர் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி எண்ணில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 300 ரூபாயை செலுத்தியதாகவும், பணம் செலுத்திய பிறகு யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை எனவும் புகார் அளித்துள்ளார். அதன்பின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் இல்லாததால் தாய் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை மீட்டுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.